போராடினோம் சுதந்திரம் பெற!! பெற்ற பின் எதற்கு போராட்டம்!!! நேதாஜியின் உருதியான எண்ணத்திற்கு மதிப்பளித்து உறுவாக்கப் பட்ட இயக்கம்.
நேதாஜியின் பிறந்த நாள் – 23.01.1897
நேதாஜியின் இறந்த நாள் –??????? கண்டு பிடிக்க உதவுங்கள் இந்திய மக்களே
இன்றைய ஒரிஸ்ஸாவின் கட்டாக் நகரில் பிறந்தவர்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியால் தியாகிகளுக்கெல்லாம் தியாகி என பாரட்டை பெற்றவர்.
முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களால் இந்தியாவிற்கு நல்லதொரு விடியலை உருவாக்கித் தந்த தன்னிகரில்லாத செயல் வீர தலைவர் என்ற பாரட்டை பெற்றவர்.
தேவையில்லா விளம்பரம் தேடிக் கொள்ள விரும்பாத செயல் வீரர்.
சொல்வதை விட செயலாற்றுவதில் அதிக பற்று கொண்டவர்.
இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக போராடியவர்.
இந்திய விடுதலைக்காக போராடி வாழ்நாட்களில் அதிகம் சிறையில் கழித்தவர்.
தனக்கு மறுபிறப்பு இருந்தால் தான் ஒரு தமிழனாக பிறக்க வேண்டும் என்ற அளவிற்கு தமிழனை நேசித்தவர்.
இந்திய விடுதலைக்கு பிறகும் எந்த ஒரு மொழியையும் மற்றவர் மீது திணிக்காமல் தாய்மொழிக் கல்விக் கொள்கையை அறிவித்தவர்.
பெண்களுக்கு சமஉரிமை அளித்து ராணுவத்தில் பங்கு பெற செய்தவர்.
1992ஆம் ஆண்டு இந்திய அரசால் இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா வழங்கப் பட்டது ஆனால் அந்த விருதை பெற்றுக் கொள்ளாதது ஏன்? சிந்தியுங்கள்!!
தான் பெற்றிருந்த ஜ.சி.எஸ் பட்டத்தை பல்கலைக் கழகத்திடம் திருப்பி அளித்தவர்.
இந்திய சுதந்திர மையம் என்ற அமைப்பை ஜெர்மெனியில் தொடங்கியவுர்.
ஆஸாத் ஹிந்த் ரோடியோ என்ற ரகசிய வானொலியை தொடங்கி இந்திய விடுதலைக்கு பெரும் பங்கை வசிக்க செய்தவர்.
ஆஸாத் ஹிந்த் என்ற அமைப்பை உருவாக்கியவர்.
ஃபார்வேர்டு பிளாக் என்ற அமைப்பை நிறுவியவர்.
இரண்டாம் உலகப் போரை முன் கூட்டி ஹிட்லர்க்கு எடுத்து சொன்னவர்.
ஜெய் ஹிந்த் என்ற சொல்லை இளைஞர்கள் மத்தியில் விதைத்தவர்.
நேதாஜியின் திறமையை கண்ட ஜெர்மனியர்களால் எக்ஸலென்ஸி என அழைக்கப்பட்டவர்.
ஏழை விவசாயிகளின் நிலையை உயர்த வேண்டுமென பாடுப்பட்டவர்.
ஆங்கில அரசால் அமைக்கப் பட்டிருந்த சட்டத்தை எதிர்த்து போராட தொண்டர் படையை உருவாக்கியவர்.
பூரண சுதந்திரமே இந்தியாவின் லட்சியம் எனற தீர்மானத்தை நிறைவேற்ற பாடுப்பட்டவர்.
1930ல் ஜனவரி 26ம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தவர்.
இந்திய மக்களிடம் ஏற்ற தாழ்வு சாதி மத பேதமில்லாத சமத்துவம் அமைய வேண்டுமென நினைத்தவர்.
ஜன கண மன பாடலை இந்தியாவின் தேசியப்பாடலாக அறிவித்தவர்.
தன்னிகரில்லாத செயல்வீர தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தேசப்பற்றையும் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம். வாரீர்!! வாரீர்!! வாரீர்!!
இப்படிக்கு.
நேதாஜி மக்கள் இயக்கம் – நாமக்கல், நிறுவனர்,தலைவர் மற்றும் செயலாளர், பொருளாலர் இயக்க உறுப்பினர்கள்